உழைப்பே உன்னதம்

Estimated read time 0 min read

Web team

thumbnail_rrk2.jpg

.
உழைப்பே உன்னதம் ! கவிஞர் இரா .இரவி !

உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில்
உண்பது உண்மையில் உன்னத இன்பம் !

அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில்
அருகே அமர்ந்து உண்பது இழுக்கு !

அப்பா தந்த சொத்தை வைத்து சோம்பேறியாக
அலுப்பின்றி உழைக்காமல் உண்பது இழுக்கு !

உருக்கினால்தான் தங்கம் நகையாக முடியும்
உழைத்தால்தான் மனிதன் மனிதனாக முடியும் !

செதுக்கினாலதான் கல் சிலையாக மாறும்
சிந்தித்து உழைத்தால்தான் சிறந்திட இயலும் !

தீக்காயம் பட்டால்தான் புல்லாங்குழல் வரும்
தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் புகழ் வரும் !

பஞ்சு நூற்றால்தான் நூலக உருவாகும்
பணிந்து உழைத்தால்தான் பண்பு உருவாகும் !

மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும்
மனிதனுக்கு உழைப்புத்தான் மேன்மையைத் தரும் !

யானைக்கு தந்தம் கம்பீரம் நல்கும்
யாருக்கும் உழைப்புத்தான் பெருமை நல்கும் !

அடுத்தவர் உழைப்பில் பிரியாணி உண்பதை விட
அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல் !

சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடிக்கும்
சும்மா இருந்தால் மனிதன் சிறுதுரும்புதான் !

மூச்சு இருக்கும் வரை வேண்டும் உழைப்பு
முடிந்த பணியினைச் செய்து வாழ்வதே சிறப்பு !

உடலை நோயின்றி காப்பது உழைப்பு
உடலுக்கு நலம் நல்குவது உழைப்பு !

உழைத்தால் இரவு உறக்கம் உறுதி
உழைக்காவிடில் உறக்கம் உறுதியன்று !

மனதிற்கு மகிழ்ச்சித் தருவது உழைப்பு
மனதைச் செம்மையாக்குவது உழைப்பு !

உலகில் உழைப்பே உன்னதம் உணர்ந்திடுக
உலகம் இயங்குவதே உழைப்பால்தான் அறிந்திடுக !

Please follow and like us:

You May Also Like

More From Author