கல்வி இன்று கடைத்தெருவில்.

Estimated read time 0 min read

Web team

hgvlp_277876.jpg

கல்வி இன்று கடைத்தெருவில்!
கவிஞர் இரா. இரவி.
******
காமராசர் காலத்தில் இலவசமாக இருந்தது
கடைச்சரக்காக ஆனது இன்று கல்வி!

ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்து ஆடுது
அதற்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர்!

மது வியாபாரிகளிடம் இன்று கல்வி போனது
மது விற்பனையோ இன்று அரசாங்கம் செய்யுது!

ஆரம்பக்கல்விக்கே ஆயிரக்கணக்கில் ஆகுது
அடுத்து மேலே படிக்க சொத்து விற்க வேண்டும் !

பகல் கொள்ளை நடக்கின்றது பள்ளிகளில்
படித்து முடித்தவர்களுக்கோ வேலை கிடைப்பதில்லை!

தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள்
தரம் இழந்து தவித்து வருகின்றன இன்று

தனியாரிடம் தாரை வார்த்தனர் மருத்துவக் கல்லூரியும்
தனியாக விற்கின்றனர் கோடிகளில் இருக்கையை !

நீட் என்ற பெயரில் வைத்தனர் ஆப்பு
நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் கொள்ளை!

விலை பேசி விற்கின்றனர் கல்வியை
வளமான கல்வி வழக்கொழிந்து விட்டது!

ஏழைகளும் இன்னல் அடைகின்றனர் கடன்பட்டு
எப்பாடுபட்டாவது தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்!

அரசுப்பள்ளிகளில் வாழ்ந்த தமிழ் அங்கும் அழிந்தது
அரசுப்பள்ளிகளிலும் வந்தது ஆங்கில வழிக்கல்வி!

அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டனர்
அடுக்கடுக்காய் தனியார் பள்ளிககளைப் பெருக்கி விட்டனர்!

வருமானம் ஈட்டிடும் தொழிலானது கல்வித்துறை
வாய்க்கு வந்தபடி வசூலித்து வருகின்றனர் !

ஏழைகளுக்கு எட்டாக்கனியானது கல்வி இங்கே
இருப்பவர்களுக்கு மட்டுமே வசமானது கல்வி!

எல்லோருக்கும் கல்வி தந்தார் காமராசர்
ஏழைகளுக்கு மறுக்கின்றனர் இன்று கல்வி தர!

கல்வி இன்று கடைத்தெருவில் விற்கின்றது
காசு இருந்தால் வாங்கலாம் படிக்காமலே!

Please follow and like us:

You May Also Like

More From Author