குளிர்பானம்

Estimated read time 0 min read

Web team

UYIRATRAL-COLD-DRINK-12-4.jpg

வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !

பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால்
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !

Please follow and like us:

You May Also Like

More From Author