செவிலியர் தினம்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

செவிலியர் தினம்! கவிஞர் இரா. இரவி !

*****
உருகிடும் மெழுகு ஒப்பற்ற செவிலியர்
உயிர் காக்கும் காத்தவராயன்கள் செவிலியர் !

மருத்துவரை விட அதிக நேரம் செலவழித்து
மருந்துகள் தந்து குணப்படுத்தும் செவிலியர் !

பொறுமையும் பரிவும் மிக்கோர் செவிலியர்
பண்பும் அன்பும் மிக்கோர் செவிலியர் !

புண்ணிற்கு மருந்திட்டு ஆற்றுபவர் செவிலியர்
புன்னகையை எப்போதும் அணிந்திருப்போர் செவிலியர் !

கோபம் என்பதை எப்போதும் அறியாதவர் செவிலியர்
கண்ணின் இமையாக நோயாளியைக் காப்போர் செவிலியர் !

வலிக்கும் ஊசியை வலியின்றிப் போடுபவர் செவிலியர்
வலி நீக்கும் மருந்துகளும் வழங்குபவர் செவிலியர் !

நோயிலிருந்து விடுபட அறிவுரை நல்குபவர் செவிலியர்
நோயாளிகளின் கவலைகளை நீக்குபவர் செவிலியர் !

விரைவில் குணமடைய உதவுபவர் செவிலியர்
வாயிலிருந்து நற்சொல் உதிர்ப்பவர் செவிலியர்!

கோபத்தில் கடிந்தாலும் பொறுப்பவர் செவிலியர்
கோபம் தணிந்து வருந்தினால் மன்னிப்பவர் செவிலியர் !

கண் விழித்து இரவுப்பணியும் பார்ப்பவர் செவிலியர்
குணமடைய ஆலோசனைகள் வழங்குபவர் செவிலியர் !

மருத்துவரிடம் எடுத்து இயம்புபவர் செவிலியர்
மருத்துவர் நோயாளிக்கு பாலமானவர் செவிலியர் !

மருந்து மாத்திரையால் பாதி குணமாகும்
மகத்தான செவிலியர் சேவையில் மீதி குணமாகும் !

தியாகத்தின் திருஉருவங்கள் நம் செவிலியர்
தன்னலமற்ற பொதுநலம் மிக்கோர் செவிலியர் !

கொரோனா கொடுமையில் உயிர் தந்து
கொரோனா நீக்கிய செவிலியருக்கு வீர வணக்கம் !

.

Please follow and like us:

You May Also Like

More From Author