தமிழாஉன் தமிழ் தமிழா?

Estimated read time 1 min read

Web team

Tamil_News_large_1983996.jpg

தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !

மொழி வாழ்த்து !

தாயே தமிழே ! தங்கச் சிலையே !
தாரணி போற்றும் முதன் மொழியே !

பல்லாயிரம் ஆண்டுகள் ஆனபோதும்
பண்டைத் தமிழ் இளமைத் தமிழே !

இனிமைத் தமிழே ! இளந்தமிழே !
எங்கள் தமிழே !ஏற்றம் தரும் தமிழே !

உலக மொழிகளின் மூல மொழியே !
உன்னை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றேன் !
—————————————–

தமிழா உன் தமிழ் தமிழா ? சிந்தித்துப் பார் !
தமிழ் கண்முன்னே சிதைவது முறையோ ?

அழகு தமிழை அலங்கோலம் செய்யலாமா ?
ஆங்கிலம் கலந்து பேசுவது சரியோ ?

ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் பேசும்போது
அவன் தமிழ் கலந்து பேசுவதைக் கேட்டதுண்டா ?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் பேசுகையில்
தமிழோடு ஆங்கிலம் கலப்பது தகுமோ ?

தமிங்கிலம் என்பது ஒரு வகை நோய்
தமிழகத்தில் விரைவாகப் பரவி வருகின்றது !

படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரின்
பேச்சிலும் தமிங்கிலம் கலந்து விட்டது !

தமிழாசிரியர்கள் நாவிலும் தமிங்கிலம்
தடுக்க வேண்டும் தமிங்கில உரையாடலை !

தொலைக்காட்சிகள் தமிங்கிலம் பரப்பி வருகின்றனர்
தொன்மையான தமிழுக்குத் தொல்லை தருகின்றனர் !

செத்தபிணமென்று என்னை அழைக்க வேண்டுமென்று
பெத்த தாயே வற்புறுத்துவது மடமையின் உச்சம் !

ஆங்கிலத்தையும் வடமொழியையும் தமிழில் இருந்து
அகற்றிட தமிழர்கள் யாவரும் உறுதி ஏற்போம் !

Please follow and like us:

You May Also Like

More From Author