தமிழ்த்தேனீ இரா.மோகன்.

Estimated read time 0 min read

Web team

IMG-20240525-WA0045.jpg

தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் ஐயா
தமிழ் இலக்கியத்தில் வாழ்கிறார் !

கவிஞர் இரா. இரவி.

******

உள்ளமும் வெள்ளை உடல்நிறமும் வெள்ளை
உதட்டில் புன்னகை எப்போதும் அணிந்திருப்பார்!

பெரியவர் இளையவர் என்ற பாகுபாடின்றி
படித்தவுடன் அனைவரையும் பாராட்டிய பண்பாளர்!

யார் மீதும் கோபம் கொள்ளாத கொள்கையாளர்
யாருடனும் எளிதில் நட்பு பாராட்டுபவர்!

அணிந்துரை கேட்டால் உடன் வழங்கிடுவார்
ஆலோசனைகள் வழங்கி வெளியிட்டு உதவிடுவார்!

ஆலமரமாக இருந்து பலருக்கு உதவியவர்
ஐயா என்றவுடன் அகமகிழ்ந்து சிரித்திடுவார்!

சங்க இலக்கியத்தில் புலமைகள் மிக்கவர்
சங்கத்தமிழை எளிமையாக்கி வழங்கியவர்!

சீரிதழ்கள் பலவற்றில் இலக்கியம் பகிர்ந்தவர்
சிந்தையை தமிழுக்காக என்றும் செலவழித்தவர்!

பட்டிமன்ற நடுவராக முத்திரை புரிந்து வென்றவர்
பாரதியின் வைரவரிகளை மேற்கோள் காட்டிடுவர்!

திருக்குறளை மிகவும் நேசித்தவர் எப்போதும்
திருக்குறளுக்கு முன்னுரிமை வழங்கி சிறப்பித்தவர்!

செல்லாத நாடே இல்லை என்னும் அளவிற்கு
சீனா வரை சென்று தமிழ் பரப்பியவர்!

வருடம் ஒருமுறை அமெரிக்கா செல்வார்
வண்டமிழை வளர்க்கவும் மகள் அரசியைப் பார்க்கவும்!

ஒப்பிலக்கியத் துறையின் தலைவராக இருந்து
ஒப்பில்லா இலக்கியப் பணியினை ஆற்றியவர்!

நிர்மலா அம்மாவை காதலித்து மணந்தவர்
நித்தமும் அம்மாவை நேசித்து மகிழ்ந்தவர் !

ஈடுசெய்ய முடியாத பேரழிப்பு இலக்கியத்திற்கு
இனிய முகம் நெஞ்சம் விட்டு அகலாது!

என்னை சிலையாக்கிய சிற்பி அவர்
என்னை செதுக்கி ஒழுங்கு செய்தவர்!

என் தந்தைக்கும் மேலாக அன்பு செலுத்தியவர்
என்னை அவரது செல்லப்பிள்ளையாக வளர்த்தவர்!

உடலால் உலகைவிட்டு மறைந்திட்டாலும்
உள்ளங்களில் என்றும் வாழ்வார் தமிழ்த்தேனீ

.

Please follow and like us:

You May Also Like

More From Author