நீதியைத்தேடி.

Estimated read time 0 min read

Web team

IMG_20240324_093450_008.jpg

நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

தன் சதையை அறுத்து நீதி வழங்கிய
தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு !

தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு
தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு !

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன்
தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு !

பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய
புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு !

உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி
உலகம் அலையும் அவலம் நேர்ந்தது !

நடிகரின் வழக்கு என்றால் விரைவாக
நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு !

பெரும் பணக்காரர்கள் என்றால் உடன்
பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது உண்டு !

பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு
பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் !

பொறுத்து போதும் என்று இன்று
பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் !

தாமதமான நீதியும் அநீதிதான் என்பது
தாமாதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு !

சிறு நெருப்பை பெரும் தீயாக்கி விட்டனர்
சிந்தையில் போராட்ட குணத்தை வளர்த்தனர் !

நீதியின் பிறப்பிடமான தமிழ்மண் மக்கள்
நீதியைத் தேடி அலையும் அவலம் நேர்ந்தது !

Please follow and like us:

You May Also Like

More From Author