சர்க்கரை வியாதி வந்தால் கண் பாதிக்கப்படுமா? வியாதியுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க

Estimated read time 0 min read

பொதுவாக நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோயாக பார்க்கப்படுகின்றது.

இந்த நோயானது தற்போது 80 சதவீதமான மக்களை பாதித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது கண்களை சேதப்படுத்தும் மற்றும் பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம் என மருத்தவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படியான சந்தேகங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய் அதிகரிக்கும் பொழுது கண் நோய் ஏற்படும் என பலர் கூறுவார்கள்.

இது உண்மையான விடயம் தான்.

நீரிழிவு நோயாளிகளை பாதிக்கக்கூடிய நோயாக கண் நோய் பார்க்கப்படுகின்றது.

இந்த நீரிழிவு ரெட்டினோபதி, நீரிழிவு மாகுலர் எடிமா, கண்புரை மற்றும் கிளௌகோமா உள்ளிட்ட பல்வேறு வகையான கண் நோய்கள் உள்ளன.

இரத்த சர்க்கரை அல்லது இரத்த குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது அது கண்களை பாதிக்கின்றது. சரியான மருந்துகளை தொடர்ந்து எடுத்து கொள்ளும் போது மாற்றங்கள் சில வாரங்களில் பார்க்கலாம்.

இந்த பலவீனமான இரத்த நாளங்கள் கண்ணின் நடுப்பகுதியில் இரத்தம் வர ஆரம்பிக்கலாம். பலவீனமான இரத்த நாளங்கள் பல்வேறு கண் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும்.

இது போன்ற கண் வியாதிகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் இரத்த அழுத்தத்தையும், இரத்த குளுக்கோஸ் அளவையும் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.

கண் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

1. கண் பரிசோதனைகளை மேற்கொள்ளல்.

2. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதிக்க வேண்டும்.

3. கண்ணில் ஏதாவது மாற்றம் காணப்படுமாயின் உரிய சிகிச்சைகளை கண் மருத்துவரின் மேற்க் கொள்ள வேண்டும்.

4. கண் நோய் கடுமையாகும் பட்சத்தில் லேசர் சிகிச்சை அல்லது கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author