பிஸ்தா பர்ஃபி செய்வது எப்படி?

Estimated read time 0 min read
தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்,

பால் பவுடர் – ½ கப்,

சர்க்கரை – 250 கிராம்,

நெய் – தேவையான அளவு,

நறுக்கப்பட்ட பிஸ்தா – தேவையான அளவு,

பிஸ்தா எஸ்ட்ராக்ட் – 2 தேக்கரண்டி.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் நெய்யை உருக்கவும். பால் பவுடரை சேர்த்து, கலவையை கிளறவும். இந்தக் கலவையில் பாலை ஊற்றி நன்கு கலக்கவும். மெதுவாக பால் சேர்க்கவும். கலவை ஒரு மென்மையான மாவாக ஒன்றாக திரண்டு வரும். கலவை கெட்டியாக இருந்தால், மற்றொரு தேக்கரண்டி பால் சேர்க்க வேண்டும்.

அதில் பொடித்த சர்க்கரை, பிஸ்தா எஸ்ட்ராக்ட் சேர்த்து கலக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும், விரைவில் கலவை கெட்டியாகத் தொடங்கும்.

அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறவிடவும். கலவையில் பிஸ்தாவை சேர்த்து அதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பச்சை பிஸ்தா துண்டுகளை மேலே சேர்க்கவும். 4 முதல் 6 மணி நேரம் கழித்து துண்டுகளாக்கலாம். சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.

Please follow and like us:

You May Also Like

More From Author