மழைக்கால நோய்களும்,வீட்டு மருத்துவமும்

Estimated read time 1 min read

மழைக்கால நோய்கள் மற்றும்  காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவமும்,மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளும் அதனை தீர்க்கும் வழிமுறைகளும் எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சிலருக்கு காய்ச்சல் சளி போன்றவை ஏற்பட ஆரம்பித்து விடும்..சிலருக்கு மழைக்காலம் ஆரம்பித்தவுடன் தொடங்கும்..
சிலருக்கு வயிற்றுப்போக்கு வாந்தியும் ஏற்படலாம்..இப்படி ஏற்பட்டால் டெங்கு மலேரியா மூளைக்காய்ச்சல் என்று பயம் கொள்ள வேண்டாம்…சீதோஷ்ண நிலை மாறும் போது இவ்வாறு ஏற்படும்…வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும். ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி என நோய்களின் பாதிப்புகள் வரிசையில் வந்து நிற்கும்.

நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும், பாதை சீரமைப்பும், சாலைப் பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால், மழைத் தண்ணீர் வடிய வழியின்றித் தெருவெல்லாம் குளமாகிவிடுகிறது.இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் கலந்து நோய்க்கிருமிகள் வாழ வழியேற்படும்.விளைவு.வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என்று பல தொற்றுநோய்கள் நம்மைப் பாதிக்கத் தொடங்கிவிடும். பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள் நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் உருவாகிறது.

அப்போது நம்மிடையே ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால். இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது? மழை காலத்தில் பரவும் நோய்கள் என்னென்ன? மழைக்காலத்தில் கொசுவின் மூலம் நோய்கள் அதிகம் பரவுகிறது. கொசுவின் மூலம் பரவக்கூடிய நோய்களான, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, எலிக்காய்ச்சல். காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்றவை தண்ணீர், ஈக்கள், உணவு மூலம் பரவுகின்றது. இந்த நோய்கள் தொற்றாமல் இருக்க நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.மழைகால நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சுத்தமான சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. காய்ச்சிய நீரைப் பருக வேண்டும், தெருவோரக் கடைகளில் சாப்பி டுவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

‘ஃபுளு’ எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற பிரதான நோய். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் தொல்லை கொடுக்கும். இந்த வைரஸ் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க ‘பாரசிட்டமால்’ மாத்திரை உதவும்.தும்மல், மூக்கு ஒழுகுதல் தொல்லைகளைக் கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், நல்ல காற்றோட்டமான அறையில் படுக்க வைக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ உணவுகளை அடிக்கடி தர வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் சாதாரணத் தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும். இக்காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. நான்கு வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும்.

பாக்டீரியா/வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இக்கிருமிகளைப் பரப்புகின்றன. வழக்கத்தில் இந்த நோயாளிகள் அதிகளவில் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கம், மரணம் என ஆபத்தை நெருங்குவார்கள்.

எனவே இவர்கள், சுத்தமான குடிநீர்,உப்புக் கரைசல் நீர்,‘எலெக்ட்ரால்’ நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். அப்போதுதான் நீரிழப்பு சரியாகும். இந்த நோய்களைத் தடுக்க, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரைக் குறைந்தது பத்து நிமிடம் கொதிக்க வைத்து, ஆறவைத்துக் குடிப்பது நல்லது. குடிநீர் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கத் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம்.

அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் சீதபேதிக்குக் காரணம். தெருக்கள், குளக்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது, மலத்தில் வெளியாகும் இக்கிருமிகளின் முட்டைகள், மழைக் காலத்தில் சாக்கடைநீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும்.

இவை நம் குடலை அடைந்ததும் கிருமியாக வளரும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்துபோவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். சீதபேதியைத் தடுக்க சுயத் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, குடிநீர்த் தூய்மை, உணவுத் தூய்மை ஆகியவை மிக அவசியம். முக்கியமாக, தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

‘அடினோ வைரஸ்’ கிருமிகளின் தாக்குதலால் இது வருகிறது. அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. கண் சிவந்து கண்ணீர்வடிதல், எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள். இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி சொட்டு மருந்தைத் தேர்வு செய்வது நல்லது; சுய மருத்துவம் வேண்டாம்.

இந்த நோய் வராமல் தவிர்க்க, கண்நோய் வந்தவர் கண்ணைக் கசக்கக் கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

‘சால்மோனெல்லா’ எனும் பாக்டீரியாக்களால் இந்த நோய் வருகிறது. இக்கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி கால்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.

பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி தொல்லை தரும். உடல் சோர்வடையும். இக்காய்ச்சலைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ எனும் கிருமிகள் இருந்தால் ‘எலிக் காய்ச்சல்’ எனப்படும் ‘லெப்டோபைரோசிஸ்’ நோய் வரும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்துகொள்வதும் வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும். இதைவிட முக்கியம், குளத்துநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது.

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

”வீட்டு வைத்தியம்”  மழை கால காய்ச்சலுக்கான,வீட்டு மருத்துவம்; மழைக்காலம் ஆரம்பித்தவுடன் பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் கீழ்க் கண்டவாறு கஷாயம் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் வாரம் ஒருமுறை குடித்து வாருங்கள்.. ஐந்து_நபர்கள் குடிக்கும்  அளவுக்குள்ள கஷாயம். தேவையானவைகள்- வேப்பிலை 5 கொத்து…சித்தரத்தை 10 கிராம்,அதிமதுரம் 10 கிராம், சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம்,சோம்பு 10 கிராம்,சீரகம் 10 கிராம், அரிசி திப்பிலி 10 கிராம் இவை எல்லாவற்றையும் நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவும்…தண்ணீர் அரை லிட்டர் ஆகும் வரை கொதிக்க விடவும்.. இனிப்பிற்கு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்…இவற்றை முதல் நாள் இரவு தயார் செய்து வைத்து மறுநாள் காலை மற்றும் மாலை 50 மில்லி வீதம் குடிக்கவும். 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்தால் 25 மில்லி கொடுக்கவும்..

ஆவியில் வேக வைத்த உணவுகளையே உண்ணவும்.செரிமானம் ஆக தாமதமாகும் உணவுப் பொருட்களை மழைக்காலத்தில் உண்ணுவதை தவிர்க்கவும்..அடிக்கடி சிறு நீர்  கழிக்க வேண்டிவரும்.. சிறுநீரை அடக்காமல் போய் வரவும்.கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்… முடிந்தால் தினமும் சாம்பிராணி அல்லது குங்கிலியம் புகையை வீடு முழுவதும் இரவில் போடவும்.. உணவுப் பொருட்களை மூடி வைக்கவும்.விரைவில் செரிமானம் ஆகாத, கேரட், பீட்ருட்,உருளை, வாழைக்காய், பீன்ஸ், கடலை வகைகள், எண்ணெய் வித்துக்களை தவிர்க்கவும்.சிலர் மாதாமாதம் பேதிக்கு மருந்து சாப்பிடுவார்கள்.. மழைக்காலங்களில் சாப்பிட வேண்டாம்.மழைக்கால உணவு வகைகளில்… கம்பு, சோளம், மரவள்ளிக் கிழங்கு, கொண்டைக்கடலை, வறுத்த நிலைக்கடலை (வேர்க்கடலை) ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்…
இவை செரிமானம் ஆவதில் இலகுவான தன்மையை ஏற்படுத்தி மலச்சிக்கல் இல்லாமல் இலகுவாக மலம் கழிக்க வழிவகுக்கும்…

கோதுமை,மைதா அசைவம் சார்ந்த பொருட்களை தவிர்க்கவும்.மீன் வகைகளை எல்லா காலங்களிலும் பயன்படுத்தலாம்.கருவாடு தவிர்க்கவும்..காரத்தை தவிர்த்தல் நலம்..மிளகாய் காரத்தை தவிர்த்து விட்டு குழம்பில் மிளகு. சீரகத்தை அதிகமாக்கி கொள்ளுங்கள்..இஞ்சி பூண்டும் மழைக்காலங்களில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்…எப்பொழுதும் உணவில் நாம் சேர்க்கும் மஞ்சள் தூளை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொள்ளவும்..பால் டீயை விட பிளாக் டீயே நல்லது…பிளாக் டீ அல்லது காஃபியில் சிறிது பசு நெய்யை கலந்து இஞ்சி சாறு கலந்து குடிப்பது நன்று..சளி பிடிக்காது..சுவாச கோளாறு வராது..வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தால் கண்டிப்பாக கால்களை கழுவிக் கொண்டு உள்ளே செல்லவும்.. சளி இருமலுக்கு உடனடி
நிவாரணம் தரும். சளிக் காய்ச்சல் – இருமல் – இருந்தாலும் குணமாகும்தேவையான பொருட்கள்- 1)சுக்கு2)மிளகு3)தனியா4)திப்பிலி5)அதிமதுரம்6)சித்தரத்தை மேற் கூறிய பொருட்களில் சில மளிகைக் கடைகளிலும் சில நாட்டு மருந்துக் கடைகளிலும் (பொடியாகவே கூட ) கிடைக்கும் அல்லது காதி பவன் போன்ற கடைகளில் எல்லாப் பொருட்களும் பொடியாகவோ அதாவது தூளாகவோ கிடைக்கிறது இந்த ஆறு பொருட்களையும் சம அளவு ஒன்றாகச் சேர்த்து கலந்து அல்லது இடித்து தூளாக்கி ஒரு
தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீரில் போட்டு நாலில் ஒரு பங்காகச் சுருங்கும் வரை கொதிக்க வைத்து பனை வெல்லம் சேர்த்து தேநீர் போல தினமும் குடித்து வர எத்தகைய – சளி – சளிக் காய்ச்சல் – இருமல் – இருந்தாலும் குணமாகும்.
இது கை கண்ட அனுபவ மருந்தாகும்.

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும். சரி, இப்போது அந்த கருப்பட்டி காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து குடித்து, உங்கள் உடம்பைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் இதனை மழைக்காலத்தில் தினமும் செய்து குடித்து வந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

 

தேவையான பொருட்கள்-தண்ணீர் – 1 கப்சுக்கு பொடி – 1 டீஸ்பூன், கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன், சுக்கு பொடிக்கு… உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப், மல்லி – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்.செய்முறை- முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

காய்ச்சல் குணமாக மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம்.

இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை குடுக்கும்.

காய்ச்சல் – சாதாரண ஜூரத்திற்குஇருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

 

எந்த விதமான காய்ச்சலும் குணமாக வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.  ”குளிர்காய்ச்சல்” நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர நோந்கள் குணமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author