முதுகுவலியை குறைக்கும் கஷாயம்

Estimated read time 0 min read

சிற்றரத்தை சூரணம் – 2 கிராம்
நெருஞ்சில் சூரணம் – 2 கிராம்
ஆமணக்கு சூரணம் – 2 கிராம்
தேவதாரு சூரணம் – 2 கிராம்
முக்கிரட்டை சூரணம் – 2 கிராம்
சீந்தில்கொடி சூரணம் – 2 கிராம்
சரக்கொன்றை சூரணம் – 2 கிராம்
தண்ணீர் – 300 மில்லி

செய்முறை:

தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி உடலை பலப்படுத்த இந்த கஷாயம் உதவும். மூளை அனுப்பும் தகவல் சிறு மூளை வழியாக முதுகுத்தண்டுக்கு வந்து அங்கிருந்து உற்பத்தியாகும் நரம்புகளின் செயல்பாடு காரணமாக தான் உடல் சீராக இயங்குகிறது.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author