எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ரன்வீர் சிங், ஜானி சின்ஸ்..காரணம் என்ன?

Estimated read time 0 min read

எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் ஆகியோரின் பெயர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கான காரணத்தை தேடிய ரசிகர்கள், ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள் என்று கூறவேண்டும்.

காரணம், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் மருந்துகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது அந்த விளம்பரம்.

பொதுவாகவே ரன்வீர் சிங் சர்ச்சையான விஷயங்களை, யாரும் எளிதில் செய்ய தயங்கும் விஷயங்களை செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண போட்டோ ஷூட், பளிச் நிறத்தில் ஆடைகள், வித்தியாசமான அலங்காரம் என ரன்வீர் எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பவர். அந்த வரிசையில், இந்த விளம்பரமும் இடம்பிடித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author