சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது….. எல்.முருகன் விமர்சனம்…!!

Estimated read time 0 min read

சிங்கார சென்னை சீரழிவு சென்னையானதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னையின் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

சாலைகள் வெள்ளக்காடாக உள்ளது. இந்நிலையில் இதை சுட்டிக்காட்டிய பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் மழைக்கே தாங்கமுடியாத அளவிற்கு சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

Please follow and like us:

More From Author