டிசம்பர் 15-ல்….. மோதிக்கொள்ளும் “கணவன் – மனைவி” கொண்டாட்டத்தில் கோலிவுட் ரசிகர்கள்…!!

Estimated read time 0 min read

சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தின் புது  தம்பதிகளான அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடியாக உள்ளனர்.  இவர்களது திருமணத்திற்கு ஏராளமானோர் நேர்மறையான வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில்,  திருமணத்திற்கு பின்பு இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.  அதிலும், 

ரயிலின் ஒலிகள்  என இருவரும் நடித்து வெளியான பாடல் அதிகம் ரசிகர்களால் கேட்கப்பட்டு ரசிக்கப்பட்ட பாடலாக உள்ளது.  இந்நிலையில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவுள்ளது.  அதன்படி, அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் என்ற திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.

அதேபோல கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. இருவரது படமும் ஒரே நாளில் வெளியானாலும் கூட அவரது ரசிகர்கள் இரண்டு படங்களையும் கண்டிப்பாக பார்த்து  வெற்றியடைய செய்வோம் என சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

Please follow and like us:

More From Author