நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

Estimated read time 0 min read

வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி பாதிய வழியிலேயே நின்றது.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனை எழுத்தில் நடுவழியில் நின்ற பேருந்து ஒரு மணி நேரம் பழுது பார்த்து எடுத்து சென்றுள்ளனர். இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் பேருந்துகளை சீராக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

More From Author