பற்கள் பிடுங்கிய விவகாரம் : அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை.!!

Estimated read time 0 min read

பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அமபாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கவும், விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கைகளை தனக்கு  வழங்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பும் தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது

Please follow and like us:

More From Author