லாரி மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

Estimated read time 0 min read

விழுப்புரம் மாவட்டம் வழியாக கம்பத்தில் இருந்து சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செல்வகுமாரன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி டிரைவர் சடன் பிரேக் பிடித்ததால் அரசு சொகுசு பேருந்து லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்து கண்டக்டர் செல்வம் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

More From Author