2031 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவார் என நினைக்கிறன் – வார்னரின் அதிரடி பதில்.!!

Estimated read time 1 min read

2031 உலகக் கோப்பையில் விராட் கோலி பங்கேற்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு டேவிட் வார்னர் அதிரடி பதில் அளித்துள்ளார்.

2031 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையிலும் விராட் கோலி விளையாட முடியும் என்று ஆஸி.யின் சூப்பர் ஸ்டார் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். விராட் மிகவும் உடற்தகுதி கொண்ட வீரர் என்றும், அந்த வீரருக்கு கிரிக்கெட் மீது அபரிமிதமான ஆர்வம் இருப்பதாகவும் வார்னர் கூறினார்.

சமூக வலைதளங்களில் ரசிகரின் பதிவிற்கு வார்னர் பதிலளித்துள்ளார். ‘விராட் 2031 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என்று எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட, அதனை டேக் செய்த வார்னர், அவரால் முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, அவர் மிகவும் உடற்தகுதி கொண்ட வீரர் மற்றும் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறார்’ என்று பதிலளித்தார்.

வார்னரின் இந்த வார்த்தைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வார்னர் கூறியது போல் 2027 உலகக் கோப்பையில் மட்டும் விளையாடாமல் 2031 உலகக் கோப்பையிலும் விராட் விளையாடுவார் என்றும் இரண்டு முறையும் கோப்பையை வெல்வார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை ஆஸி., 42 பந்துகள் மீதம்  வைத்து எட்டியது..

முதல் போட்டியில் தோல்வியடைந்த அதே ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் டீம்  இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஐசிசி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், இந்த உலகக் கோப்பை விராட்டின் பெயராலேயே அறியப்படும். விராட் பல உலகக் கோப்பை சாதனைகள் மற்றும் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் (673) சாதனையை விராட் கோலி முறியடித்தார். 2023 உலக கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். உலகக் கோப்பையின் நட்சத்திரமாக விராட் தேர்வு செய்யப்பட்டார்.

விராட் மட்டுமல்ல, டேவிட் வார்னரும் இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். தொடர்ந்து உலக கோப்பையில் 500 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். வார்னர் 2019 உலகக் கோப்பையில் 647 ரன்களும், இந்த உலகக் கோப்பையில் 535 ரன்களும் எடுத்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்த முதல் வீரர் ஆவார். வார்னரைப் போலவே ரோஹித்தும் 2019 மற்றும் 2023 உலகக் கோப்பைகளில் தொடர்ந்து 500 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை படைத்துள்ளார்..

No reason why he can’t, he is very fit and loves the game so much. https://t.co/5iQry4pp4Y

— David Warner (@davidwarner31) November 30, 2023

Please follow and like us:

More From Author