ஃபேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

Estimated read time 1 min read

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இதில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author