அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் – நடிகர் சிவராஜ் குமார்

Estimated read time 0 min read

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில், நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது, தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன். எனக்கு தனுஷ் பாடல் பாடியுள்ளார்.

தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் எனது மனைவி சாம்பார் செய்து கொடுப்பார்கள். அவரது மகன்கள் வருவார்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். நீங்கள் உலக அளவில் சிறந்த நடிகராக மாறியுள்ளீர்கள்.

இதிலும் அப்படித்தான் நடித்துள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜெயிலர் படத்துக்காக எனக்கு அன்பு கொடுத்ததற்கு நன்றி. அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என நடிப்பது மிகவும் கடினம். அதனை தனுஷ் நன்றாக செய்திருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author