ஐதராபாத்திற்கு சென்ற ரஜினி ?

Estimated read time 0 min read

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத்திற்கு சென்றுள்ளார்.

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகின்றார்.

இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு ரஜினி பிறந்த நாள் அன்று வேட்டையன் என்று வெளியானது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத்திற்கு சென்றுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. மேலும் இப்படம் மார்ச் மாதத்தில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author