சமந்தா… இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Estimated read time 0 min read

நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பை தொடர்ந்து தனக்கு மற்றொரு பாதிப்பு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக நடிகை சமந்தா புதிய திரைப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது உடல் நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனக்கு மற்றொரு பாதிப்பு இருப்பதாக நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

அதில், பூக்கள் எவ்வளவு அழகானவை அவற்றை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும்.

ஆனால் பூக்களால் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது கொடுமையானது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவு வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவு சமந்தா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author