சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு

Estimated read time 1 min read

‘சீயான்’ விக்ரமின் பிறந்தநாள் இன்று!
அவருடைய பிறந்தநாள் அன்று, அவரை கொண்டாடும் விதமாக ‘தங்கலான்’ திரைப்படத்தின் சர்ப்ரைஸ் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அதில் ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாதது ரசிகர்களுக்கு சற்று மனவேதனையை தந்துள்ளது.
நடிகர் விக்ரம் கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவருடைய படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
எனினும் படத்தின் பாடலோ, வெளியீட்டு தேதியோ இன்றும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ரசிகர்கள் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author