நடிகரை காதலித்து கழட்டி விட்ட மீனா..?

Estimated read time 0 min read

நடிகை மீனா குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின்னாலில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு நடிகை மீனா சினிமாவில் வளர்ந்தார். நடிகை மீனா மீது எத்தனையோ நடிகர்கள் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். அவரிடம் நேரடியாக இதனை கூறவும் செய்திருக்கிறார்கள்.

உச்சகட்டமாக நடிகை மீனாவின் வீட்டிற்கு பெண் கேட்டு கூட சென்றிருக்கிறார்கள் சில நடிகர்கள். அதில் முக்கியமானவர் நடிகர் சரத்குமார். நடிகை மீனா மீது காதல் வயப்பட்ட நடிகர் சரத்குமார் மீனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கே சென்று பெண் கேட்டு இருக்கிறார்.

ஆனால், அவருடைய தாய் இப்போது தான் என்னுடைய மகள் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு திருமணம் என்ற யோசனை எல்லாம் எங்களுக்கு இல்லை என கூறியிருக்கிறார்.

நடிகை மீனாவை திரைத்துறைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபரை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார் அவருடைய தாய். அதன்படி வித்யாசாகர் என்ற ஒருவரை திருமணமும் செய்து கொண்ட மீனா.. நைனிகா என்ற ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

சமீபத்தில் இவருடைய கணவர் வித்யாசாகர் உடல்நல பிரச்சினை காரணமாக இயற்கையை எழுதினார். எத்தனையோ நடிகர்கள் மீனாவை காதலித்திருக்கிறார்கள். ஆனால், நடிகை மீனாவும் ஒரு நடிகரை காதலித்திருக்கிறார்.. சில காரணங்களால் அவரை கழட்டியும் விட்டிருக்கிறார் என்று சொன்னால் அப்படியா..? என்று ஒரு வியப்பு வரும்.

ஆம், நடிகை மீனாவும் பிரபல நடிகர் ஒருவரும் காதலித்து இருக்கிறார்கள். பிறகு சில காரணங்களால் பிரிந்திருக்கிறார்கள். யார் அந்த நடிகர்..? ஏன் இருவரும் பிரிந்தார்கள்.. என்று பார்க்கலாம் வாருங்கள்.

நடிகர் பிரபுதேவாவும் நடிகை மீனாவும் டபுள்ஸ் சென்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். எந்த கதாநாயகனுடனும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் கதாநாயகனுடன் படு ரொமான்டிக்கான காட்சிகளில், படு சூடான காட்சிகளில் பிரபு தேவாவுடன் நடித்திருக்கிறார் நடிகை மீனா. உச்ச கட்டமாக நீச்சல் உடையை அணிந்து கொண்டு பிரபு தேவா முன் ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

விஷயம் என்னவென்றால் நடிகர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டு இருக்கிறார் நடிகை மீனா. அந்த நேரத்தில் நடனம் என்றாலே பிரபு தேவா தான் என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்தது.. பிரபுதேவாவின் இமேஜ் அப்போதுதான் மெல்ல மெல்ல உருவாகி கொண்டிருந்தது.

பிரபுதேவாவும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் பிரபுதேவாவிடம் காதல் வயப்பட்டு இருக்கிறார் நடிகை மீனா.

பிரபுதேவாவும் மீனாவை காதலித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் நடவடிக்கைகள் மீது நடிகை மீனாவுக்கு சில சந்தேகங்கள் வந்திருக்கின்றன.

மட்டுமில்லாமல் பிரபுதேவாவை காதலிக்கும் விஷயத்தை அறிந்த நடிகை மீனாவின் நெருக்கமான தோழிகள் சிலர் பிரபுதேவாவிற்கு அதுதான் வேலை.. அவர் நிறைய நடிகைகளை காதலித்திருக்கிறார்.. உன்னையும் அப்படி தான் காதலிக்கிறார்.

அவருடன் நெருக்கமாக வேண்டாம்.. என கூறி எச்சரித்திருக்கிறார்கள். இதுவும் பிரபுதேவாவின் நடவடிக்கைகள் ஏற்பட்ட மாற்றமும் நடிகை மீனாவை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

எதற்கு வம்பு என தன்னுடைய வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு பிரபுதேவாவுக்கு டாட்டா காட்டிவிட்டார் நடிகை மீனா.

இங்கே விஷயம் என்னவென்றால் நடிகை மீனாவின் தோழிகள் கூறியது போலவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்ற நிலையில் இருந்த நடிகர் பிரபுதேவா நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author