நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி ?

Estimated read time 1 min read

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1976 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் தான் மிதுன் சக்கரவர்த்தி.   தற்போது வரை ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் இவர் சுமார் 48 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 1980 களின் முற்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வந்தவர் தான் இவர்.

தமிழில் இவர் குரு மற்றும் யாகவராயினும் நாகாக்க ஆகிய இரு படங்களில் முக்கிய வேடம் ஏற்று  நடித்துள்ளார். மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி  பெங்காலி, ஒடிசா, போஜ்புரி, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய பிரமுகர்களில் மிதுன் சக்கரவர்த்தி  ஒருவர், அந்த சம்பவத்தை தொடர்ந்து தனது காங்கிரஸ் எம்பி பதவியை ராஜினாமா செய்த மிதுன், பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தற்போது 73 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தி அண்மையில் நடைபெற்ற டான்ஸ் பங்களா டான்ஸ் என்கின்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இவர் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author