நயன் to சிம்பு மற்றும் பப்லூ to ஷீத்தல்.. காதலில் விழுந்தவர்கள் பிரிந்து செல்ல காரணம் இது தான்..!

Estimated read time 0 min read

காதலில் விழுந்தவுடன் உருகி, உருகி காதலித்து விட்டு ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற கணக்கில் மின்னல் போல பிரிந்து சென்ற காதல் ஜோடிகள் யார்? யார்? என்று இந்தத் தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திரை பிரபலங்களில் பிரேக்கப் என்ற வார்த்தையை கேட்டதுமே நீங்கள் பட் என்று நடிகை நயன் மற்றும் சிம்புவை கூறி விடுவீர்கள். வல்லவன் படத்தில் நடிக்கும் போது பூத்த காதல் சில நாட்களிலேயே முடிவை சந்தித்தது.

இதனை அடுத்து சிம்பு ஹன்சிகா இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் வாலு படத்தில் நடித்த போது தான் அவர்களுக்கு காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இதனை அடுத்து பார்ட்டி, டேட்டிங் என்று ஜாலியாக இருந்த இவர்கள் திடீர் என்று தங்களது ரிலேஷன்ஷிப்பை முறித்துக் கொண்டார்கள்.

அது போலவே திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்த அஞ்சலி, ஜெய் உடன் கொண்ட தொடர் பால் தனது சினிமா எதிர்காலத்தை இழந்தார். இதனை அடுத்து ஜெய்யை விட்டு பிரிந்து விட்டார். இவர்களின் காதல் பலூன் படத்தில் ஆரம்பித்தது.

இளம் இசையமைப்பாளராக திகழ்ந்த அனிருத் தன்னைவிட வயது குறைவான ஆண்ட்ரியாவை காதலித்தார்.இது இவர்களுக்கு இடையே பல முரண்பாடுகளை ஏற்படுத்தியதால் காதல் வந்த வேகத்திலேயே முறிந்து போனது.

இதுபோலவே பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்ட கவின் ,லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உருகி, உருகி காதலித்து வந்தார்கள். பின்பு வீட்டை விட்டு வெளியே வந்த பின் யார் இவர்கள்? என்று கேட்கக்கூடிய வகையில் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

தற்போது பரபரப்பை ஏற்படுத்திய பப்லு, ஷீத்தல் காதலானது தன்னைவிட வயது குறைந்த பெண்ணை காதலித்து விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று அறிவித்ததோடு நின்று விட்டு, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த காதல் தற்போது கசக்க சில மாதங்களில் அவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author