பிரமாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படம் 

Estimated read time 0 min read

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதாவாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கவுள்ள ராமாயணா திரைப்படத்தில் தான் இவர் பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் நிதேஷ் திவாரி ஏற்கனவே தொடங்கி விட்டார்.
பிங்க்வில்லாவின் அறிக்கையின்படி, நித்தேஷ் மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோரை ராமாயணா திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஹான்ஸ் ஜிம்மர், தி லயன் கிங், டைட்டானிக், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் இன்செப்ஷன் போன்ற பல பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author