பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்

Estimated read time 0 min read

பிரபல நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணியில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.
பணக்கார இசைக் குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி, சிறு வயதிலிருந்தே பாடுவதிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை பெற்றவராக இருந்தார்.
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவருக்கு தற்போது 45 வயதாகிறது.
2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் நடிகராக பயணித்து வரும் பிரேம்ஜி அமரன், 2005 ஆம் ஆண்டு வெளியான “நியாபகம் வருதே” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதற்கு பின் இவர் பல தமிழ் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றினார். பல நல்ல பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author