ரத்த காயங்களுடன் விஜய் சேதுபதி- ட்ரெண்டாகும் போஸ்டர்

Estimated read time 1 min read

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக ‘மகாராஜா’ படக்குழு இப்படத்தின் இரண்டாது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

கையில் கத்தியுடன் ரத்த காயங்களுடன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Fierce & extremely powerful #Maharaja Special Second Look Poster

Wishing our dearest Makkal Selvan @VijaySethuOffl a very happy birthday

Written & directed by @Dir_Nithilan#VJS50 #HappyBirthdayVijaySethupathi #HBDVijaySethupathi pic.twitter.com/CfpFX5tsCT

— Passion Studios (@PassionStudios_) January 16, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author