‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Estimated read time 1 min read

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியானது.
விக்ரமின் 58வது பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை எஸ்.யு.அருண் இயக்குகிறார். சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் இவர் ஆவார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆனால், இப்படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திர விவரங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
விக்ரம், ‘காளி’ என்ற அச்சமற்ற கேங்ஸ்டராக இப்படத்தில் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு வீடியோவின் மூலம் தெரியவந்தது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author