வைரலாகும் கங்குவா புதிய போஸ்டர்

Estimated read time 1 min read

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
Happy Pongal!
मकर संक्रांति शुभकामनाएँ!
ಎಲ್ಲರಿಗೂ ಸಂಕ್ರಾಂತಿ!ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!
అందరికి సంక్రాంతి!శుభాకాంక్షలు! #Kanguva #Kanguva2ndLook pic.twitter.com/Xe1yQ89nf4

— Suriya Sivakumar (@Suriya_offl) January 16, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author