அமெரிக்காவின் செய்தி சுதந்திரம் எனும் ஆடை கிழிந்தது

 

சமீப நாட்களில், பெய்ஜிங்கிற்கான துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனத்தின் முன்னாள் செயதியாளர் கமில் எர்டோகடு (Kamil Erdogdu), அமெரிக்காவின் செய்திகள் சுதந்திரம் தொடர்பான விமர்சனக் கட்டுரையை வெளியிட்டார்.

அவர் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், சீனா தனது சொந்த நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளை மேலும் ஆக்கப்பூர்வமான முறையில் சொல்கின்றது. வாயிலைத் திறக்கும் நிலையில் உள்ள சீனா, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நண்பர்களை சீனாவில் பயணிப்பதை வரவேற்கின்றது.

இதற்கு மாறாக, சீனாவை அவதூறு கூறும் தகவல்களை இயற்றும் செய்தியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்க, கடந்த 5ஆண்டுகளில் அமெரிக்க அரசு பெரும் தொகை பணத்தை செலவித்தது என்று குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியாளர்களுக்கு பயிற்சி பெறுவதற்காக, 150கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு மசோதா ஒன்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று ஐரோப்பிய அறிஞர் ஜென் ஓபெர்க்(Jan Oberg)அண்மையில் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி கமில் எர்டோகடு கூறினார்.

சீனாவின் போர் கப்பல்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்பரப்பில் இயங்கவில்லை. இதற்கு மாறாக, இந்த நாடுகளின் போர் கப்பல்கள் சீனாவைச் சுற்றிவளைக்க முயன்று வருகின்றன என்பதை முழு உலகத்தில் உள்ள மக்கள் பார்க்க முடியும். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, தங்களுக்கு புதிய எதிரி தேவைப்படுகின்றது என்ற காரணமாக, இந்த நாடுகள் இப்படி செயல்படுகிறது என்று ஜென் ஓபெர்க் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

அமெரிக்கா அறிமுகப்படுத்திய 2021ஆம் ஆண்டுக்கான நெடுநோக்கு ரீதியான போட்டி சட்டத்தில், 2022முதல் 2026ஆம் வரையிலான ஒவ்வொரு நிதி ஆண்டுகளிலும், உலகளவில் சீனாவின் செல்வாக்கை பலவீனப்படுத்தும் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் 30கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்கா முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், செய்தி ஊடகங்கள், சீனா மீது அவதூறு பரப்பும் துணையாளராக பணியாற்றி வருகின்றன.

ஆனால், உண்மையில், அமெரிக்க அரசு மற்றும் அதன் செய்தி ஊடகங்களின் நம்பகத்தக்க திறன் சேதப்பட்டு வருகின்றது என்று கமில் எர்டோகடு கருத்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author