அர்ஜென்டீன அரசுத் தலைவரைச் சந்தித்த ஷி ச்சின்பிங்கின் சிறப்பு தூதர்

12ஆம் நாள் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,
அர்ஜென்டீன அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவரின் சிறப்பு தூதரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான வூ வெய்கூவா அர்ஜென்டீன பதிய அரசுத் தலைவர் மீலெயின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டார்.


சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக்களை அவர் மீலெயிடம் தெரிவித்தார். ஷி ச்சின்பிங்கிற்கு நன்றி தெரிவித்த மீலெ அர்ஜென்டீன-சீன உறவில் அர்ஜென்டீன புதிய அரசு உயர்வாக கவனம் செலுத்துகின்றது என்றும் ஒரே சீனா என்ற கொள்கையை அர்ஜென்டீனா தொடர்ந்து பின்பற்றும். பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகளை முன்னேற்ற பாடுபட அர்ஜென்டீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author