ஆசிய பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் ஒருமைப்பாட்டுப் போக்கு பற்றிய 2024ஆம் ஆண்டறிக்கை

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் முதலாவது செய்தியாளர் கூட்டம் மார்ச் 26ஆம் நாள் நடைபெற்றது.

ஆசிய பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் ஒருமைப்பாட்டுப் போக்கு பற்றிய 2024ஆம் ஆண்டறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஆசிய பொருளாதார அதிகரிப்பு வேகம் 4.5 விழுக்காட்டை எட்டி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு மிகப் பெரிதாக பங்காற்றும் என்று இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 2024ஆம் ஆண்டு உலகத்தில் வேலை வாய்ப்பு நிலைமை நன்றாக இல்லை. ஆனால் ஆசியாவில் வேலைவாய்ப்பில்லா விகிதம் உலக நிலையை விட தாழ்ந்து காணப்படும். தவிரவும், ஆசியாவில் பணவீக்க நிர்ப்பந்தம் மேலும் தணிவடையும். எண்ணியல் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறை உயர்வேகமாக வளர்ச்சியடையும்.

ஆசியாவில் பிரதேச ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து முன்னேற்றப்பட்டு வருகிறது. என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 26 முதல் 29ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author