இணக்கமான சக வாழ்வுடன் கூடிய நவீனமயமாக்கம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், தேசிய சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி, “மனிதர்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழக் கூடிய நவீனமயமாக்கத்தை அழகான சீனாவின் கட்டுமானத்தின் மூலம் முன்னேற்றுவது” என்ற தலைப்பில், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ஜியூஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.
வரும் 5 ஆண்டுகள் அழகான சீனாவின் கட்டுமானத்துக்கு முக்கியமான காலமாகும். புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சூழலியல் நாகரிகச் சிந்தனையைச் செயல்படுத்தி, மக்களை மையமாகக் கொண்டு, தூய்மையான நீர் மற்றும் பசுமையான மலை செல்வமாகும் என்ற கருத்தை நிலைநாட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியில் அழகான சீனாவின் கட்டுமானத்தை முனைப்பான இடத்தில் வைத்து, நகர்ப்புற மற்றும் கிராமப்புறக் குடியிருப்புச் சூழல் மேம்படவும் அழகான சீனாவின் கட்டுமானம் பயனடையவும் ஊக்குவித்து, உயர்நிலை சுற்றுச்சூழலின் மூலம் உயர்தர வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author