இந்தோனேசிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

இந்தோனேசிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபிஅன்டோவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 20ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.


ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் இந்தோனேசியாவும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகளாகும். இரு தரப்பின் கூட்டு முயற்சியில், சீன-இந்தோனேசிய பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக கட்டியமைக்கும் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் பிரபோவோவுடன் இணைந்து கூட்டாக முயற்சி செய்து இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கூட்டு கட்டுமானத்தில் மேலும் பெரிய சாதனைகளைப் பெறுவதை எதிர்பார்க்கிறேன்.

இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகள் கிடைக்கவும் பிரதேசம் மற்றும் உலகின் செழுமைக்கும் நிலைப்புத் தன்மைக்கும் வலுவான உந்து ஆற்றலைக் கொண்டு வரவும் எதிர்பார்க்கிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author