இந்த முன்மொழிவை மறுத்தது உலக சுகாதார பேரவை

தைவான் பார்வையாளர் என்ற தகுதியாகவே உலக சுகாதார பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான முன்மொழிவை இக்கூட்டதின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது 27ஆம் நாளன்று தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார பேரவை 8ஆவது முறையாக இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் என்ன? தைவான் தொடர்பாக, ஒரு சில நாடுகள் வழங்கியுள்ள முன்மொழிவு, ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீறியுள்ளது. ஒரே சீனா கோட்பாடு, ஐ.நா. பொது பேரவையில் 2758ஆம் தீர்மானம் மற்றும் உலக சுகாதார பேரவையில் 25.1ஆம் தீர்மானம் ஆகியவற்றில் உறுதிப்படுத்தபட்ட அடிப்படை விதி ஆகும்.

இதுவே, தைவான் பிரதேசம், உலக சுகாதார பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான முன் நிபந்தனையாகும். உலக சுகாதார பேவரை தைவான் பிரதேசம் தொடர்பான முன்மொழிவை மறுப்பது என்பது ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை விதிகள் குறித்து பரந்த அளவிலான ஒத்த கருத்துக்களை பன்னாட்டுச் சமூகம் பேணிக்காப்பதை எடுத்துக்காட்டுகிறது.


இதில், தைவான் பிரதேசத்தை சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான கருவியாகவே அமெரிக்கா எப்போதும் பயன்படுத்தி வருகிறது. கூடுதலாக, இவ்வாண்டில் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே, வாக்குகளை வெல்லும் வகையில் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலர், தைவான் விவகாரம் மூலம் சூழ்ச்சி செய்ய முயல்கின்றனர்.


தற்போது, சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய தருணத்தில் உலகம் உள்ளது. ஆனால், தைவான் பிரதேசத்தின் தற்போதைய நிர்வாகம் மற்றும் சில நாடுகள் வேண்டுமென்றே அரசியல் தந்திரம் நடத்தி, அரசியல் சுயநலனை சர்வதேச பொது சுகாதார பாதுகாப்புடன் தொடர்புபடுத்த முயல்கின்றன. இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது பன்னாட்டு சமூகம் குற்றஞ்சாட்டும் என்பதில் ஐயம் இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author