இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு

Estimated read time 0 min read

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் வாகனங்களின் உற்பத்தி அளவு 66 லட்சத்து 6 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. விற்பனை அளவு 67 லட்சத்து 20 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.6 விழுக்காடு அதிகமாகும் என்று சீன வாகனத் தொழிற்துறை சங்கம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை, வேகமாக அதிகரித்து வரும் போக்கினை நிலைநிறுத்துகிறது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு முறையே 21 லட்சத்து 15 ஆயிரமாகவும், 20 லட்சத்து 90 ஆயிரமாகவும் இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 28.2 விழுக்காடு மற்றும் 31.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.


தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் ஏற்றுமதி அளவு அதிகமான நிலையில் இருந்து, இத்தொழிலின் அதிகரிப்புக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகிறது என்று சீன வாகனத் தொழிற்துறை சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சென் ட்சிஹுவா தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் வாகன ஏற்றுமதி அளவு, 13 லட்சத்து 24 ஆயிரமாகும். இதில் புதிய எரியாற்றல் வாகனங்களின் ஏற்றுமதி அளவு, 3 லட்சத்து 7 ஆயிரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author