உண்மையான சின்ஜியாங் பொய் கூற்றுகளை முறியடித்தல்

ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 4ஆவது சுற்று பரிசீலனைக் கூட்டம் உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள், ஸ்விட்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்றது.

சீன மனித உரிமையின் வளர்ச்சி பாதை மற்றும் சாதனைகள் குறித்து சீனப் பிரதிநிதி ஒருவர் இதில் எடுத்துக்கூறினார். இச்சாதனைகள், 120க்கு மேலான நாடுகளால் ஆக்கப்பூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, சின்ஜியாங் போன்ற கருப்பொருட்களைச் சாக்குப்போக்காகக் கொண்டு, மனித உரிமை பரிசீலனையை அரசியல் மயமாக்கும் குறிப்பிட்ட சில மேலை நாடுகள் தோல்வியடைந்துள்ளன.


2023ஆம் ஆண்டில், சுமார் 26 கோடியே 54 இலட்சத்து 40 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் உபசரித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 117 விழுக்காடு அதிகரித்து, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இத்தன்னாட்சிப் பிரதேசத்தில் தொடர்ச்சியான பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இங்கு தலைகீழான மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?


பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் சட்ட அமைப்பு முறை மற்றும் நடைமுறையாக்கம் பற்றிய வெள்ளையறிக்கையை சீனா ஜனவரி 23ஆம் நாளில் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் செயல்களும் சாதனைகளும் இதில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சின்ஜியாங்கில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படுவதற்கு இது சரியான பதிலாகும்.
பயங்கரவாதம் என்பது, மனிதக் குலத்தின் பொது எதிரியாகும். சீனா இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் பங்கரவாத எதிர்ப்புக்கான முக்கிய போர்க் களமாகும். 1990ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டின் இறுதி வரை, உள்ளூர் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதிக அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.


பயம், உயிரிழப்பு, காயம், வளர்ச்சி தேக்கம் முதலியவை அதிகமாக ஏற்பட்டதால், சட்டப்படி பயங்கரவாத எதிர்ப்பு சாராம்ச ரீதியில் மனித உரிமைக்கு உத்தரவாதம் செய்யலாம் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். இவ்வெள்ளை அறிக்கையில், பயங்கரவாதத்தின் அர்த்தம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சட்டத்தின்படி பயங்கரவாத எதிர்ப்பு மேலும் வெளிப்படையாக நடைபெறலாம். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் சரியாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்தப்பட்டலாம்.
நடைமுறையாக்கத்தின்படி, சீனாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பணிக்கான சட்டம் ஒழுங்கு, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்ணோட்டத்திற்கு ஏற்றது.

பயங்கரவாத நடவடிக்கைகளை பயனுள்ளதாக கட்டுப்படுத்தி, தண்டித்து, மனித உரிமைக்கு மதிப்பும் உத்தரவாதமும் அளித்துள்ளது. குறிப்பிட்ட மேலை நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பிரச்சினையை கையாளும் போது “ இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமையை சாக்குப்போக்கில், சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுகின்றன.

இது, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கும் உலகின் மனித உரிமை உத்தரவாதத்துக்கும் தீங்கு விளைவிக்கின்றன என்பது ஐயமில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author