ஒரே சீனா என்ற கொள்கை மாறப்போவதில்லை: சீனா

சீன தைவான் தலைவராக அண்மையில் லய் ட்சிங் தே பதவி ஏற்றார். நீரிணை இரு கரை உறவில், தைவான் வேறு, சீனா வேறு என்று பதவி ஏற்பு விழாவில் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தவிரவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்கா, தைவானுடன் இணைந்து, ஒரே சீனா என்ற கொள்கைக்குப் புறம்பான நடவடிக்கை மேற்கொள்வதில் இதுவும் ஒன்றாகும்.

தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். தைவானில் தேர்தல் நடைபெற்றாலும், ‘ஆளும் கட்சி’ மாறினாலும், அது சீனாவின் உள் விவகாரமாகும். அமெரிக்காவின் தவறான கூற்றுகளும் நடவடிக்கைளும், ஒரே சீனா என்ற கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளுக்குப் புறம்பானது.

தவிரவும், தைவான் சுதந்திர சக்திகளுக்கு தவறான சமிக்கை அளிப்பதற்கு சமமானது. அமெரிக்கா தைவானுடன் இணைந்து வருவது, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்திற்கு உண்மையான சவால்களாகும்.

தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாகும். மேலும், சீன-அமெரிக்க உறவுக்கான அரசியல் அடிப்படைக்கான ஆதாரமாகவும், சீன-அமெரிக்க உறவில் முதலாவது எச்சரிக்கைக் கோடாகவும் உள்ளது. இது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.

தற்போது, இரு கரை உறவின் வளர்ச்சிக்கான தலைமை உரிமை மற்றும் வழிகாட்டி உரிமை சீனாவிடயே உள்ளது. தைவான் நீரிணையின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் மன உறுதி மற்றும் ஆற்றல் சீனாவுக்கு உள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீனா பேணிக்காக்கும் என்பதில் ஐயமில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author