கவலையை ஏற்படுத்திய அமெரிக்கா மற்றும் ஜப்பானின் இராணுவ பட்ஜெட்

அமெரிக்கா மற்றும் ஜப்பானின் 2024ஆம் ஆண்டிற்கான இராணுவ நிதித் திட்டங்கள் வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டி, பதற்ற நிலைமையைத் தீவிரமாக்கியுள்ளது.

சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் இணையதளம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி, 93 விழுக்காட்டினர் இது பற்றி பெரும் கவலை தெரிவித்ததோடு, இந்த இராணுவ செலவினங்களின் நியாயமற்ற அதிகரிப்பு, பிரதேச அமைதியை சீர்குலைத்து, கிழக்காசியாவில் ஏன் முழு உலகிலும் கூட புதிய சுற்று படைக்கலப் போட்டியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.


உலக ஆயுத வர்த்தகச் சந்தையின் திடீர் வளர்ச்சி பற்றி 87.2 விழுக்காட்டினர் கவலை கொண்டுள்ளனர். இது, பிரதேச மோதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதோடு, உலகளாவிய மோதலையும் தூண்டக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏபிஎம் உடன்படிக்கை, ஐஎன்எப் உடன்படிக்கை ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகியது, ஐரோப்பாவில் மரபுவழி ஆயுதப்படைகள் பற்றிய உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக ரஷியா, அமெரிக்கா மற்றும் நேட்டோ அடுத்தடுத்து அறிவித்தன. இது குறித்து 83 விழுக்காட்டினர் வருத்தம் அடைந்தனர்.


இன்னல்மிக்க நிலையில், அமைதிக்கான முயற்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக மற்ற நாடுகளின் பாதுகாப்பை சீர்குலைக்க முடியாது என்று இக்கணிப்பில் 95.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author