காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சீனா தனது வாக்குறுதியைக் கடைப்பிடிக்கிறது

தற்போது, உலகளவில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றப் பிரச்சினை ஏற்கனவே தற்போதைய நெருக்கடியாக மாறியுள்ளது.

தற்போதைய கடினமான சவால்களை எதிர்கொண்ட சூழ்நிலையில் தான், காப் 28 காலநிலை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், பாரிஸ் உடன்படிக்கையின் செயல்பாட்டு நிலைமை குறித்து உலகளவில் முதன்முறையாக அறிந்து, இடைவெளியைக் கண்டறிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு கொப் 28 மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

உலகில் மகிப் பெரிய வளரும் நாடான சீனா, பாரிஸ் உடன்படிக்கைக்கு வந்ததற்கும் அதன் அமலாக்கத்திற்கும் முக்கிய உந்து விசையாகப் பங்காற்றி வருகிறது. இதற்கான நீண்டகால இலக்குகளை நனவாக்குவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, சீனத் தேசிய நெடுநெக்குத் திட்டத்தில் சேர்க்கப்படுள்ளது. 2005ஆம் ஆண்டை விட, 2022ஆம் ஆண்டில் சீனாவின் கரியமில வாயு வெளியேற்ற அளவு 51 விழுக்காட்டுக்கு மேல் குறைந்தது என்று கணக்கிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரி எரியாற்றல் நுகர்வு வளர்ச்சி 3 விழுக்காடுடன், சீனா 6.2 விழுக்காட்டுப் பொருளாதார வளர்ச்சி அடைந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், உலக காலநிலை மேலாண்மையை சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றது. தெற்கு தெற்கு ஒத்துழைப்பு மூலம், சீனா பிற வளரும் நாடுகளுக்கு ஆதரவு மற்றும் உதவி வழங்கி வருகின்றது.

எடுத்துக்காடாக, கென்யாவில், சீனத் தொழில் நிறுவனம் பொறுப்பாகக் கட்டியமைத்துள்ள கரிசா(Garissa)50 மெகாவாட் ஒளிவோல்ட்டா மின் உற்பத்தி நிலையம் 2019ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் மிக பெரிய ஒளிவோல்ட்டா மின் உற்பத்தி நிலையமாக, அது 70 ஆயிரம் குடும்பங்களின் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் மக்களின் மின்சார தேவையை நிறைவு செய்யலாம்.சொல்களை விட நடைமுறைகள் மேலும் பயனுள்ளதாக உள்ளன.

தற்போது, உலக காலநிலை மேலாண்மையைப் பொறுத்த வரை, வாய்வழி வாக்குறுதி மட்டுமல்லாமல், நடைமுறைகளும் தேவை. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது.

Please follow and like us:

You May Also Like

More From Author