கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு

கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு

கொமொரோஸ் நாட்டின் அரசுத் தலைவர் அஸாலி அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் துணை தலைவருமான ஹெ பௌசியாங் மே 26ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் மொரோனியில் அரசுத் தலைவர் அஸாலியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

25ஆம் நாள் மொரோனியில் ஹெ பௌசியாங்கை அஸாலி சந்தித்துரையாடினார்.
அப்போது, ஹெ பௌசியாங் கூறுகையில், இரு நாட்டு உறவுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கொமொரோஸுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களை நடைமுறைப்படுத்த சீனா விரும்புகிறது.

மேலும் தத்தமது மைய நலன்களைப் பேணிக்காப்பதில் ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்னெடுப்பை உயர் தரமாகவும் கூட்டாகவும் கட்டியமைக்க விரும்புகிறது.

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம், சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றம் உள்ளிட்ட கட்டுக்கோப்பில் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி இரு நாட்டின் பாரம்பரிய நட்புறவைப் புதிய வளர்ச்சி நிலைக்கு முன்னேற்றச் சீனா விரும்புவதாகவும் ஹெ பௌசியாங் தெரிவித்தார்.


கொரொமோஸின் நாட்டு கட்டுமானத்தில் சீனா வழங்கியுள்ள நீண்டகால ஆதரவிற்கு அஸாலி நன்றி தெரிவித்தார். இரு நாட்டின் பாரம்பரிய நட்புறவைக் கொரொமோஸ் பேணிமதிக்கும். ஒரே சீனா என்ற கோட்பாட்டில் தொடர்ந்து ஊன்றி நிற்கும்.

சீனாவுடன் இணைந்து ஒன்றுக்கு ஒன்று நலன் மற்றும் கூட்டு வெற்றி தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாட்டுறவைப் புதிய நிலைக்கு வளர்வதை முன்னேற்ற கொரொமோஸ் விரும்புகிறது என்று அஸாலி கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author