சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை

சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை
2023ஆம் ஆண்டின் சீன-தெற்காசியப் பொருட்காட்சி ஆகஸ்டு 16ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை குன்மிங் நகரில் நடைபெறுகின்றது.

இதில், இலங்கைத் தலைமையமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான வர்த்தகக் குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய 100 பேர் கலந்து கொண்டனர்.


சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த செய்தியாளருக்குப் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைசிறந்த வழிகாட்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள் வளர்ச்சிச் சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும், இது புதிய யுகத்தில் உலகின் நிலைப்புத்தன்மைக்கு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

மேலும், தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவது இலங்கை அரசின் முதன்மை இலக்கு ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், எனவே, சீனச் சந்தைக்கு இலங்கை அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார்.

எடுத்துக்காடாக, சீன-தெற்காசிய பொருட்காட்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகியவற்றில் இலங்கை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றது.

எதிர்காலத்தில், சீனாவின் மேலதிக மாநிலங்கள் மற்றும் நகரங்களுடன் வர்த்தக ஒத்துழைப்பைக் கட்டியமைப்பதை இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், இலங்கை சிறிய நாடு என்றபோதிலும், சீன சந்தை நட்பு ரீதியாக இருக்கின்றது. அதோடு, சீனச் சந்தையில் வணிக வாயப்பு வரம்பற்றது என்று இலங்கை நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author