சீனப் பொருளாதாரம் மீது வெளிப்புறத்தின் நம்பிக்கை அதிகரிப்பு

இவ்வாண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் மீதான மதிப்பீட்டை 0.2 சதவீதப் புள்ளிகளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் ஆகியவை அண்மையில் உயர்த்தின. சர்வதேச நிர்வாக ஆலோசணை கூட்டு நிறுவனமான கீர்னி Kearney வெளியிட்ட உலகளாவிய வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கான நம்பிக்கை குறியீட்டின்படி, சீனா கடந்த ஆண்டில் இருந்த 7ஆவது இடத்திலிருந்து இவ்வாண்டில் உள்ள மூன்றாவது இடமாக உயர்ந்து, புதிதாக வளர்ந்து வரும் சந்தையில் முதலிடம் வகிக்கிறது.
ஏப்ரல் திங்கள் சீனப் பொருளாதார செயல்பாடு பற்றிய அறிக்கையை சீன அதிகார வட்டாரம் மே 17ஆம் நாள் வெளியிட்டது. மேற்கூறிய வெளிப்புற மதிப்பீட்டை இது கோட்டிட்டுக்காட்டுகிறது.

சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடு அதிகரித்தது. தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மை முன்மதிப்பீட்டு குறியீடு உயர்ந்த செழிப்பு நிலையில் இருக்கிறது.

சேவை துறையின் வணிக நடவடிக்கை குறியீடு நான்கு மாதங்களாக செழுமை இடைவெளியில் இருக்கிறது. சீனப் பொருளாதாரம் சீராக இயங்கி, மீட்சியடையும் சிறந்த போக்கு தொடர்ந்து, ஆக்கப்பூர்வ காரணிகள் அதிகரித்துள்ளன என்று இந்த தரவுகள் காட்டுகின்றன.


இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் நுகர்வு, பண்பாடு மற்றும் சுற்றுலா நுகர்வு முதலியவை, நுகர்வு சந்தையின் மீட்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது.

அதே வேளையில், உண்மை பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 11.1 விழுக்காடு அதிகரித்து, உலகின் இரண்டாவது பெரிய இணைய வழி சில்லறை விற்பனை சந்தையின் உயிராற்றலை காட்டுகிறது.


தற்காலத்தில் வெளிப்புற சூழ்நிலையின் சிக்கல் மற்றும் உறுதியற்ற தன்மையின் காரணமாக, சீனப் பொருளாதாரம் சில இன்னல்களைச் சந்தித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த கொள்கையின் நடைமுறையாக்கத்துடன், சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் போக்கினை நிலைநிறுத்தி, முழு ஆண்டின் அதிகரிப்பு இலக்கினை நனவாக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்களின் சில பொறுப்பாளர்கள் கூறியதை போல, நிதானமாக காலடி எடுத்து வைக்கும் சீனா, சீனாவில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு “உறுதியான ஆதரவை” வழங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author