சீனாவின் சீர்திருத்தம் பற்றிய கதைகள்

1978ஆம் ஆண்டு டிசம்பரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனாவின் சீர்திருத்தப் பயணத்துக்கு இது சின்னமாகும்.

கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் வரை, குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முதல் நாடளவில் பரவலாக்கம் வரை, சீர்திருத்தப் பணி, சீனாவின் அற்புதமான வளர்ச்சியை முன்னேற்றி வருகிறது.


கடந்த 45 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், சீனா உயர்நிலை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான தாராளமயமாக்க வசதியான கொள்கையின் மூலம், நாட்டிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ நலன்களையும் வளர்ச்சி உரிமையையும் உத்தரவாதம் செய்துள்ளது.

இறக்குமதி விரிவாக்கம், சந்தை நுழைவுக்கு அனுமதி, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்டவை மூலம் சர்வதேச முதல் தர வணிகச் சூழலை உருவாக்கவும் சீனா பாடுபட்டு வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்வைத்த சீனா, அதன் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறது.

சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, சர்வதேச நுகர்வுப் பொருட்கள் கண்காட்சி, சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி முதலியவற்றைத் தொடர்ந்து நடத்தும் சீனா, உலக மற்றும் பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கல் மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை ஊக்குவித்துள்ளது.
சீர்திருத்தத்தின் மூலம், சீனா உற்பத்தி ஆற்றலை வளர்த்து, விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக அமைதி ஆகிய 2 அற்புதங்களையும் சீனாவின் நவீனமயமாக்கத்தையும் படைத்துள்ளது.

விரைவாக வளர்ச்சி அடைவதோடு சுதந்திரத்தையும் நிலைநிறுத்த விரும்பும் நாடுகள் மற்றும் தேசங்களுக்கு புதிய வழிமுறை மற்றும் தேர்வை இது வழங்கியுள்ளது.
உலக நிர்வாக அமைப்புமுறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை சீனா முன்னேற்று வருகிறது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில், சீனாவின் ஏற்பாடு மற்றும் முயற்சியுடன், சௌதி அரேபியா மற்றும் ஈரான் உடன்படிக்கையை எட்டி, தூதாண்மை உறவை மீட்கெடுக்க தீர்மானித்தன.

இந்த இணக்கம், மத்திய கிழக்கு பிரதேசத்தின் சூடான பிரச்சினையைத் தீர்க்க உதவும் அதேவேளை, உலகின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
சீனாவின் 2ஆவது புரட்சியான சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி, சீனாவை ஆழ்ந்த முறையில் மாற்றுவதோடு, உலகிற்கும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி, கால ஓட்டத்துக்கும் உலகின் வளர்ச்சிக்கும் பொருந்திய முன்முயற்சியாகும் என்பதை உண்மைகள் நிரூப்பித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author