சீனாவின் துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளம் 7ம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது. சீன டிராகன் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி, தனது வணக்கத்தையும் வசந்த விழா வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


அவர் அதில் கூறுகையில், இவ்வாண்டு, சீனத் துருவ ஆய்வுப் பணிக்கான 40வது ஆண்டு நிறைவாகும். கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் துருவ இலட்சியம், அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது.

துருவ ஆய்வுப் பணியாளர்கள் அனைவரும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து சிறந்த முறையில், துருவப் பகுதிகளைப் பாதுகாத்து, மனித குலத்திற்கு நலன் தந்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.


சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளத்தின் திறப்பு விழா, 7ம் நாள் பெய்ஜிங், தென்துருவம், வட துருவம், துருவ ஆய்வுக் கப்பல் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author