சீனாவின் பொறியியல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் விருப்பம்

சீனத் தேசியப் பொறியியலாளர்கள் பரிசு முதன்முறையாக வழங்கப்பட்டதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் பரிசு பெற்ற சீனத் தேசிய தலைசிறந்த பொறியியலாளர்களுக்கும், தேசிய தலைசிறந்த பொறியியலாளர் குழுக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.


பொறியியல் தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு நன்மை பயத்து, எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பொறியியலாளர்கள் முக்கிய சக்தியாகவும், தேசிய நெடுநோக்கு திறமைசாலிகளில் முக்கிய பகுதியாகவும் விளங்குகின்றனர். பரிசு பெற்ற நபர்களும், குழுக்களும் சீனாவின் பல பொறியியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் தலைசிறந்த பிரதிநிதியாகவும், பொறியியலாளர்களின் முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தை நோக்கி, பொறியியல் தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கான பயிற்சியை வலுப்படுத்தி, பொறியியலாளர்களின் சமூக தகுநிலையை உயர்த்தி, அவர்கள் சாதனை பெறுவதற்கு நிபந்தனை வழங்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

நாடு தழுவிய பல பொறியியல் தொழில் நுட்ப பணியாளர்கள் முக்கிய மையத் தொழில் நுட்பங்களில் தேர்ச்சி பெற்று, தலைசிறந்த பணித்திட்டங்களை உருவாக்கி, புதிய உற்பத்தி ஆற்றல் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் தற்சார்பு மற்றும் தன்வலிமையை விரைவாக நனவாக்கி, உயர் தர வளர்ச்சிக்கு சேவை புரிந்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சி இலட்சியத்தையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author