சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை கென்யாவில் தொடக்கம்

Estimated read time 1 min read

 

சீன ஊடகக் குழுமம் வழங்கிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை ஜனவரி 31ஆம் நாள் கென்யாவுக்கான ஐ.நாவின் நைரோபி அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடுவது, சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பது என்பது இந்நடவடிக்கையின் தலைப்பாகும்.

இந்நடவடிக்கை வசந்த விழா பண்பாட்டை பாலமாக கொண்டு சர்வதேச மக்கள் தொடர்பு விரைவுபடுத்தி, பண்பாட்டின் கூட்டுப் பகிர்வை ஆழமாக்கும். ஐ.நாவின் துணைத் தலைமையமைச்சர், ஐ.நாவின் சுற்றுச் சூழல் வாரியத்திற்கான சீனப் பிரதிநிதி, கென்யாவுக்கான சீனத் தூதர் முதலிய 200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் கைய் சியொங் காணொளி வழியாக இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஆப்பிரிக்க நண்பர்களோடு இணைந்து, நவீனமயமாக்க இலட்சியத்தை கைகோர்த்துக்கொண்டு, உயர் தரமுள்ள சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவதற்கு சீன ஊடகக் குழுமம் முயற்சி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author