சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் சீரான வளர்ச்சி

Estimated read time 0 min read

சீன சுங்க துறை பொது நிர்வாகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி அளவு, 41 லட்சத்து 76 ஆயிரம் கோடி யுவானாகும்.

இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகரித்தது. சீனா 7 ஆண்டுகளாக உலக சரக்கு வர்த்தகத்தின் மிக பெரிய நாடு என்ற தகுநிலையை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கூட்டம் என்ற அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு உலக சரக்கு வர்த்தக அளவு, 7.5 விழுக்காடு குறைந்தது.

இந்த பின்னணியில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடு, முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட சீராக இருக்கிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது வலிமைமிக்க தூண்டுதல் ஆற்றலாக விளங்கும்.
ஏற்றுமதி ரீதியில், உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2023ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் சீன ஏற்றுமதியின் பங்கு, சுமார் 14 விழுக்காடு என்ற உயர்ந்த நிலையை நிலைநிறுத்தியது.

உலகில் முதலாவது பெரிய தயாரிப்பு துறை வல்லரசின் மேம்பாட்டை சீனா முழுமையாக வெளிக்கொணர்ந்தது. 2023ஆம் ஆண்டு, சீனாவின் 23 லட்சத்து 77 ஆயிரம் கோடி யுவான் ஏற்றுமதி தொகையில், தயாரிப்புத் துறைப் பொருட்களின் ஏற்றுமதி தொகை, 23 லட்சத்து 51 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.


சீனாவின் முழுமையான தொழில் முறைமை மற்றும் வலிமைமிக்க இணைப்பு ஆற்றல், பல்வேறு இடங்களில் தொழில் கூட்டங்கள் உருவாகுவதற்குத் துணை புரியும். இது தொழில் நிறுவனங்களின் செலவைக் குறைப்பதோடு, உற்பத்தி பொருட்களின் மேம்பாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் தயாரிப்புத் துறை வேகமாக வளர்ந்து வருவதற்கு இது முக்கிய காரணியாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் முக்கியமானது, “சீனாவில் தயாரிப்பு” என்பது “சீனாவில் புத்தாக்கம்” என்பதை நோக்கி வளர்ந்து வருகிறது. இது, சீனாவின் ஏற்றுமதிக்கு புதிய இயக்கு ஆற்றலை உட்புகுத்துகிறது.

2023ஆம் ஆண்டில் சீன தொழில் சின்னங்களுடைய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 9.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி தொகையில் இதன் விகிதாசாராம் 1.7 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இறக்குமதி ரீதியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு முதல், சிறப்பு உணவுகள், எண்ணியல் வீட்டு மின்சார கருவிகள், எல்லை கடந்த மின்னணு வணிகம் வரை இறக்குமதி அதிகரித்துள்ளது. சீனாவின் உற்பத்தி துறை தொடர்ந்து மீண்டு, நுகர்வு தேவை அதிகரித்து, பெருமளவிலான சந்தை மேம்பாடு வெளியாகுவதை இவை காட்டுகின்றன.
சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மறுமலர்ச்சி அடைவதுடன், வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சாதகமான காரணிகள் அதிகரிக்கும். உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக நன்மைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author